Tuesday, April 24, 2018

கோழிகளுக்கு சளி, அம்மை (குரைசா) நோய் தாக்கி கண்பகுதி வீங்கி கண்களை மூடி கொண்டால் :

ஐயா. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவ குறிப்பு : எழுதி பகிர்ந்தவர்: ராம்நாட். ப்ரித்வி.

காரணங்கள் :

 கோடைகாலத்தில் கோழிகளின் உடல்வெப்பநிலை அதிகமாகும் போது தலைப்பகுதி வீங்கி கண்களை மூடிக்கொள்ளும் மற்றும் வாய்பகுதிகளில் சிறுசிறு அம்மை கட்டிகள் போன்ற கொப்பளங்கள் ஏற்படும்


கோழிகளுக்கு சளி அதிகமாகும் போது உடல்வெப்பநிலை அதிகரித்து  அம்மை (குரைசா) நோய் தாக்கம் உண்டாகும்.அப்படி தாக்கும் போது கோழிகளின் உடலில் வெப்பநிலை அதிகரித்து கண்பகுதி வீங்கி கண்களை மூடிக்கொள்ளும்


மருத்துவ முறை :

அவ்வாறு வீங்கிய கண்களின் இமைபகுதியை திறந்து பார்க்கவும்,அப்போது முகப்பரு (அ ) சீழ்போல் கட்டி இருந்தால் கண்களில் இரண்டு சொட்டு விளக்கெண்ணெயை விட்டு கண்களின் கீழ்பகுதியில் இருந்து   பிதுக்கி அதனை வெளியே எடுத்து விடவும்



பின்பு சுடுதண்ணீரில் கல்உப்பு போட்டு வெதுவெதுப்பான பின்னர் வீங்கிய கண்பகுதிகளை நன்கு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்

பிறகு நந்தியாவட்டப்பூவின் இதழ்களை பறித்து துணியில் வைத்து கசக்கி சாறு எடுத்து கண்களில் விட்டுவர குணமாகும்


சங்குப்பூ (ம.பெ) காக்கனான்பூ (நீலநிறத்தில் இருக்கும்) அதை எடுத்து அரைத்து கண்களில் வீங்கிய பகுதிகளில் தடவி வர குணமாகும்


பாகற்காய் இலைசாற்றை விடலாம் , பிரம்மண்தண்டு செடியை கில்லினால் மஞ்சள் நிறத்தில் பால் வரும்,அந்த பாலை .கோழிகளின் கண்களில் விடலாம்

நுங்கு மரத்தின் பன மட்டை (அ) கருக்குமட்டை    இவற்றை தட்டி சாறு எடுத்து விடலாம்

கோவை தழை சாறு எடுத்து விடலாம் , முருங்கை தழையுடன் கல்உப்பு சேர்த்து அரைத்து துணியில் போட்டு சாறு எடுத்து கோழிகளின் கண்களில் விட்டுவர குணமாகும்

உணவுமுறைகள்:

  மதியவேளையில் தயிர்சாதம்,மோர்சாதம் குடுக்கலாம்

  வெந்தயம் தண்ணீர் குடுக்கலாம்

  சோர்வு நீங்க சுக்கு,கொத்தமல்லி கசாயம் குடுக்கலாம்


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :


  கோடைகாலத்தில் முடிந்தவரை கோழிகளை தண்ணீரில் நனைத்து விடவும் இவ்வாறு செய்வதால் கோழிகளின் உடல்வெப்பநிலை குறைந்து நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும்

  கோழிகள் தங்கும் இடமானது காற்றோட்ட வசதி உள்ள இடமாகவும்,குளிர்ச்சியாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்


ராம்நாட் ப்ரித்வி அலைப்பேசி எண் : 8124802464

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...