Wednesday, April 18, 2018

கோழிகளுக்கு மூலிகை தண்ணீர்

மேய்ச்சல் முறையில் வளர்க்கும் கோழிகளுக்கு தினமும் தண்ணீரில் மூலிகை கலந்து கொடுக்கும் போது அவற்றிற்கான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆடாதொடா இலைப்பொடி
கீழாநெல்லி பொடி
சுக்கு பொடி
வல்லாரை பொடி
சிறியாநங்கை பொடி
கரிசலாங்கண்ணி பொடி
தூதுவளைப் பொடி
பப்பாளி இலைச் சாறு
சீரகத்தண்ணீர்
மிளகு கசாயம்

போன்றவைகளை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம்.

வீட்டில் வைக்கும் ரசம் சிறந்த மூலிகை சாறு ஆகும். மீதமான ரசத்தை சாதத்திலோ அல்லது இட்லியிலோ பிசைந்து வைப்பதும் நல்லது.


மேலும் தகவல்களுக்கும், உங்கள் அனுபவத்தை பகிரவும் கமெண்டில் பதிவிடவும்.

திரு. S.N. திருவேங்கிடசாமி அவர்கள்

ஐயா அவர்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்,  சிறு வயதிலிருந்தே தூய நாட்டுக்கோழிகளை மீட்டெடுப்பதிலும் பாரம்பரிய இயற்க்கை முறையில் வளர்ப்பதிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.


புதிதாக கோழி வளர்ப்பவர்களுக்கு எந்த நேரத்திலும் தன் அறிவுரைகளை வழங்கி வருகிறார். பல நாட்டுக்கோழி வளர்ப்பு குழுக்களில் பங்கெடுதுள்ளார்.
அவரை தொடர்புகொள்ள : +91 99432 42856

கோழிகளுக்கு கண்ணில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு :: அடுக்கு நந்தியாவட்டை கிடைக்காத போது:

அடுக்கு நந்தியாவட்டை கிடைக்காத போது அதற்கு பதிலாக கோவை இலைச்சாறு, வெங்காயச்சாறு, நொங்குமர பட்டைச்சாறு பயன்படுத்தலாம். ஐயா அவர்களின் குரல் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கோழிகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கான மருந்து

கோழிகளுக்கு ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கான மருந்து செய்யும் முறை.

துளசி-20 இலை,
தும்பை-10 இலை,
கற்பூரவள்ளி-1 இலை,
தூதுவளை-1 இலை,
சீரகம்-5 கிராம்,
மஞ்சள்-5 கிராம்,
மிளகு-5 கிராம்,
பூண்டு-5 பல்

ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தீவனம் அல்லது தண்ணீரில் கலந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் கொடுத்தால் சுவாச நோய் சரியாகி விடும்.

இது பத்து கோழிகளுக்கான அளவு.

வெள்ளைக்கழிச்சலுக்கு மருந்து!

கீழாநெல்லி-50 கிராம், சின்ன வெங்காயம்-5, பூண்டு-2 பல், மஞ்சள்-5 கிராம், சீரகம்-20 கிராம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து... அரிசிக் குருணை அல்லது நொய்யில் கலந்து தொடர்ந்து, 3 முதல் 5 நாட்களுக்குக் கொடுத்தால்... வெள்ளைக் கழிச்சல் சரியாகி விடும்.

திருவேங்கடசாமி ஐயாவின் மருந்து.

மேற்கண்ட மருந்தைக் கொடுத்தாலும் சிறிது கசகசாவை தயிரில் ஊறவைத்து தினசரி இரண்டு வேளை கொடுத்து வர வெள்ளை கழிசல் நோய் குணமாகும்.




கோழிகளுக்கு ஏற்படும் அம்மை நோய்க்கு மருந்து: ஐயா திருவேங்கடசாமி அவர்கள் குரல் பதிவு

சின்ன வெங்காயம், மஞ்சள் மற்றும் வேப்பிலை, இந்த மூன்றையும் ஒன்றாக அரைத்து அந்த மருந்தை கோழிகளுக்கு அம்மை கொப்பளங்களின் மீது தடவி விடவேண்டும். 

இதே கலவையை நீரில் கரைத்து கசாயமாக சாப்பிடக் கொடுக்கவும். மேலும்  சின்ன வெங்காயம், மோர் அல்லது தயிர் இவற்றை உணவாகக் கொடுக்கவும். 

மேலும் மேய்ச்சலுக்கு அனுப்பாமல் தனிமைப் படுத்த வேண்டும்.

இவ்வாறு செய்துவந்தால் அம்மை நோய் விரைவில் குணமாகும்.


ஐயா அவர்களின் குரல் பதிவு

கரையான் உற்பத்தி :: அதிக புரதசத்து கோழித்தீவனம்.

கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 
1. ஒரு பழைய பானை 
2. கிழிந்த கோணி/சாக்கு
3. காய்ந்த சாணம் 
4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் 

கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். 

கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். 

மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள்

கோழி சளிமருந்து : ஐயா. திருவேங்கடசாமி அவர்கள் குரல் பதிவு

மூலிகை என்று ஐயா அவர்கள் குறிப்பிடுவது முசுமுசுத்தான் தழை, தூதுவளை,குப்பைமேனி, வெற்றிலை அல்லது கற்பூரவள்ளி இலை என்பதை நினைவில் கொள்ளவும்.

முசுமுசுத்தான் தழை படம்.




குப்பைமேனி தழை படம்.



கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...