Friday, April 6, 2018

கரு முட்டையை சோதித்தல்.

கருமுட்டை சோதிக்க ஒரு அட்டை பெட்டி உள்புறம் கருப்பு பேப்பரோ அல்லது துணியோ ஒட்டப்பட்டிருக்க வேண்டும். அட்டைப்பெட்டியில் டார்ச் லைட் வைப்பதற்கு ஒரு ஓட்டையும், முட்டை வைக்க ஒரு ஓட்டையும் போடவும்.
 1வாட் LED பல்ப் கொண்ட டார்ச்(TORCH LIGHT) லைட்


படத்தில் கண்டபடி அமைத்துக்கொள்ளலாம்.
அல்லது பிவிசி பைப்(PVC PIPE ) அட்டைப்பெட்டிக்கு பதிலாகப் பயன்படுத்தலாம்.

முக்கியமாக முட்டையை கவனமாகக் கையாள வேண்டும்.

11.       அட்டைப்பெட்டி
22.       எல்.ஈ.டி டார்ச்
33.       முட்டை வைப்பதற்கான ஓட்டை


1

கருமுட்டையின் வளர்ச்சி (நாட்களில்)
3 வது நாளில்

6 வது நாளில்

9 வது நாளில்

11 வது நாளில்

15 வது நாளில்

18 வது நாளில்

உங்கள் மேலான ஆலோசனைகளை கமெண்டில் பதிவிடுங்கள்.

இயற்கை முறையில் கோழி வளர்ப்போரின் சிறந்த வாட்ஸ்சப் குழுக்கள்(WhatsApp Group).

இயற்கை வழி நாட்டுக்கோழி : 

இந்த குழுவில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி கோழி வளர்ப்பில் சிறந்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். இந்த குழுவில் இணைவதற்கு, குழுவின் அட்மின் திரு. திருவேங்கடசாமி 9943242856  மற்றும் திரு. சக்தி. 9500350840  அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்மை தரும் நாட்டுக்கோழி :



இந்த குழுவில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறந்த ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள். இந்த குழுவில் இணைவதற்கு, குழுவின் அட்மின் திரு. திருவேங்கடசாமி 9943242856  மற்றும் திரு. மரியசுரேஸ். 7010296440  அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

கோழி மருந்து :


இந்த குழுவில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கு ஏற்படும் வியாதிகளுக்கு தீர்வுகள் தருகிறார்கள். இந்த குழுவில் இணைவதற்கு, குழுவின் அட்மின் திரு. திருவேங்கடசாமி 9943242856  மற்றும் திரு. இளஞ்செழியன். 9494904047  அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சேவல் நாட்டு வைத்தியம் :


இந்த குழுவில் அனுபவம் வாய்ந்த நண்பர்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் கோழிகளுக்கும் சேவல்களுக்கும் ஏற்படும் வியாதிகளுக்கு தீர்வுகள் தருகிறார்கள். இந்த குழுவில் இணைவதற்கு, குழுவின் அட்மின் திரு. திருவேங்கடசாமி 9943242856  மற்றும் திரு. மணிகண்டன். 7598444533 அவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்களுக்கு தெரிந்த குழுக்களைப் பற்றி பதிவிடுங்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும்.

கோழிக்கூண்டை சுற்றியிருக்க வேண்டிய மூலிகைச் செடிகள்.

நாகதாளி.

இந்த செடி விஷ பூச்சிகளை கூண்டுக்கருகில் அண்டவிடாது.

சிறியாநங்கை.


இம்மூலிகைச் செடி சிறந்த விஷமுறிவு. இந்த செடியும் விஷப்பூச்சிகளுக்கு எதிரானது. இதன் இலையை சிறிதளவு கோழியின் உணவில் சேர்த்தால் கோழியின் எதிர்ப்பு சக்தி கூடுதலாகும்.

திருநீற்றுப்பச்சிலை.


இம்மூலிகைச்செடி இலைகளை காயவைத்து பொடி செய்து கோழிகளின் உடம்பில் போட்டால் கோழிப்பேன்கள் அழிந்துவிடும்

கோழியும் கீழாநெல்லியும்

கீழாநெல்லி கல்லீரலை காக்கும் ஓர் அற்புத மூலிகை என்பது அனைவருக்கும் தெரிந்தது. கோழிகளுக்கும் கீழாநெல்லி ஒரு சிறந்த மருந்து.
கீழாநெல்லியை பறித்து இளம் வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு கோழிகளின் உணவில் கலந்து வாரம் ஒரு முறை கொடுத்து வந்தால் கல்லீரல் தொற்று வராது.
கோழிகளுக்கு வரும் அதிக நோய்கள் கல்லீரல் தொற்றின் மூலமாகவே வருகிறது.
கீழாநெல்லி செடிகளை அதிகம் நம்மால் வளர்க்க முடியவில்லை என்றால் கீழாநெல்லி பொடி நாட்டு மருந்து கடையில் வாங்கிக் கொள்ளலாம்.
கோழிகளுக்கு நோய் வருமுன் காப்பதற்கு கீழாநெல்லி ஒரு சிறந்த மருந்து என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.


உங்கள் அனுபவங்களை கமெண்ட் செய்யுங்கள். நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும்.

கீழாநெல்லி பற்றி தெரிந்துக் கொள்ள "கீழாநெல்லி"

கோழிக்கூண்டு அமைக்கும் முறை.

கோழிக்கூண்டு எப்போதும் தென்வடலாக அமைக்க வேண்டும்(தெற்கு வடக்காக). வாசல் கிழக்கு அல்லது மேற்கில் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். காற்றோட்ட வசதியுள்ள வகையில் தரையிலிருந்து சுமார் 2.5 அடியில் இருந்து 3 அடிக்கு மேல் கோழி வலை தடுப்பு அமைக்க வேண்டும்.

1. கோழிவலை (Chicken Mesh or Weld Mesh) 2. செங்கல்/சிமிண்ட் கல்/தகரம் வைத்து 2.5 அல்லது 3 அடி உயரத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும். 3. மேற்கூரை ஓடு அல்லது தகரத்தால் அமைக்கலாம். கீற்று கொட்டகை அமைத்தால் கீற்றுக்கு மேல் கோழிவலை விரிப்பது பாதுகாப்பானது. 4. கதவு 5. (நீலநிறக்கோடு) ஊக்கு அல்லது ஸ்க்ரீன் கம்பி(Curtain Spring) அமைத்துக்கொள்வது நல்லது. வெயிற்காலங்களில் கோழிக்கூண்டை ஈரத்துணியால் மூடுவதற்கோ மறைப்பதற்கோ பயன்படும்.

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...