ஐயா. திருவேங்கடசாமி அவர்களின் அனுபவ ஆலோசனையை பகிர்ந்துள்ளேன்.
மேய்ச்சல் முறையில் வளரும் கோழிகள் கழிவு நீர், கழிவு உணவுகள் மற்றும் எச்சம் கலந்த உணவைக்கூட உண்ணலாம்.
ஆகவே கோழிகளுக்கு வாரம் இருமுறை
சீரகம்
வரகொத்தமல்லி
சோப்பு
சுக்கு சிறிதளவு
கலந்து கசாயம் வைத்து கோழிகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.
இது போல் கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு. ஐயா அவர்களின் ஆலோசனை.
பிராய்லர் கோழிகளின் கழிவு நீர், கெட்டுப்போன சாதம் சாப்பிட்டு மேய்ச்சல் முறை கோழிகளுக்கு ஏற்படும் தொற்றுகளை சரி செய்வது முடியாது.
மேய்ச்சல் முறை கோழிகளுக்கு வைக்கப்படும் தண்ணீரை காகம் நாய்கள் குடிக்காமல் இருக்க வேண்டும். தண்ணீர் வைக்கும் பாத்திரம் ஒரு நாளுக்கு இரண்டு முறை கழுவி சுத்தமான தண்ணீர் அல்லது மூலிகை தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.
Monday, April 16, 2018
கோழியின் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான மருந்து : ஐயா. திருவேங்கடசாமி அவர்கள் மருந்து
பிரம்மன் தண்டு செடியை உடைத்தால்
அதில் பால் வரும், அந்த பாலை இரு துளி கண்ணில் பிரச்சனை உள்ள கோழிகளின் கண்ணில் விட்டால்
கண் பிரச்சனை தீரும்.
பிரம்மன் தண்டு செடியின் படம்
பிரம்மன் தண்டு செடி கிடைக்கவில்லை
என்றால் அடுக்கு நந்தியாவட்டை பூவை கசக்கி அந்த சாற்றை கோழியின் கண்ணில் விடலாம்.
அடுக்கு நந்தியாவட்டை பூவின் படம்
கோவை இலைச்சாறு அல்லது முருங்கை
இலை கல் உப்பு வைத்து அறைத்தெடுத்த சாறும் கண்களுக்குப் பயன் படுத்தலாம்.
இவ்வாறாகப் பயன்படுத்தும்
போது கோழிகளின் கண்களில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும்.
கோழி இரத்தமாக எச்சமிடுதலுக்கு : ஐயா. திருவேங்கடசாமி அவர்களின் மருந்து.
கோழியின் எச்சத்தில் இரத்தம்
கலந்து போகிறது என்றால் அது சூட்டினால்தான். ஆகவே அதற்கு அம்மான் பச்சரிசி தழையைப்பறித்து
ஒரு இலந்தப்பழம் அல்லது நாவல் பழ அளவில் அரைத்து மோருடன் கலந்து இரண்டு நாட்கள் கொடுத்தால்
சரியாகிவிடும்.
அம்மான் பச்சரிசி தழையின்
படம்.(EUPHORBIA HIRTA)
ஐயா. திருவேங்கடசாமி அவர்களின்
அனுபவ மருந்தில் எனது கோழிக்கு கொடுத்து பலன் கிடைத்தது.
Subscribe to:
Posts (Atom)
கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து
திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு : அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...