Tuesday, April 24, 2018

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :  
அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக்.
*கண்களை சுற்றி மட்டும் ஒட்டுண்ணி போல பேன்கள்*
 இதற்கு கற்பூரத்தை தேங்காய் எண்ணையுடன் கலந்து கண்ணைச் சுற்றியும் தலையிலும் கொண்டையிலும் தேய்க்க பூரணமாக அழித்து விடலாம்.
-இது திருவேங்கட சாமி அய்யாவின் குறிப்பு.

*உடலில் இருக்கும் பேன்கள்:*

கோழி பீய்ச்சான் தழை அல்லது எருக்கன் தழையை கூண்டில் ஆங்காங்கே போட்டால் கோழிப் பேன் வராமல் தவிர்க்கலாம்.
வசம்பு பொடி மற்றும் வெள்ளைப் பூண்டு இரண்டையும் தண்ணீரில் கலந்து, மாதம் ஒரு முரை தண்ணீரில் முக்கி விட வேண்டும்.
வசம்பு பொடியை கோழி கூட்டில் தூவியும் விடலாம்.

*அடை கோழிகளுக்கு பேன் தொல்லை இருந்தால்*
 வேப்ப எண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெயையும் சரிவிகிதத்தில் கலந்து இறக்கைக்கு அடியில், முதுகு பகுதியில் தேய்த்து விட சரியாகும். வயிற்று பகுதியில் தேய்ப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் முட்டையில் எண்ணெய் படுவது தவிர்க்கப் படுகிறது.

இதுவும் அய்யாவின் குறிப்புதான்.

என் புரிதல் தவறாக இருந்தால் திருத்தவும்🙏🏼
-கார்த்திக்,

அலைப்பேசி எண் : +231 77 791 7607

கோழிகளுக்கு சளி, அம்மை (குரைசா) நோய் தாக்கி கண்பகுதி வீங்கி கண்களை மூடி கொண்டால் :

ஐயா. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவ குறிப்பு : எழுதி பகிர்ந்தவர்: ராம்நாட். ப்ரித்வி.

காரணங்கள் :

 கோடைகாலத்தில் கோழிகளின் உடல்வெப்பநிலை அதிகமாகும் போது தலைப்பகுதி வீங்கி கண்களை மூடிக்கொள்ளும் மற்றும் வாய்பகுதிகளில் சிறுசிறு அம்மை கட்டிகள் போன்ற கொப்பளங்கள் ஏற்படும்


கோழிகளுக்கு சளி அதிகமாகும் போது உடல்வெப்பநிலை அதிகரித்து  அம்மை (குரைசா) நோய் தாக்கம் உண்டாகும்.அப்படி தாக்கும் போது கோழிகளின் உடலில் வெப்பநிலை அதிகரித்து கண்பகுதி வீங்கி கண்களை மூடிக்கொள்ளும்


மருத்துவ முறை :

அவ்வாறு வீங்கிய கண்களின் இமைபகுதியை திறந்து பார்க்கவும்,அப்போது முகப்பரு (அ ) சீழ்போல் கட்டி இருந்தால் கண்களில் இரண்டு சொட்டு விளக்கெண்ணெயை விட்டு கண்களின் கீழ்பகுதியில் இருந்து   பிதுக்கி அதனை வெளியே எடுத்து விடவும்



பின்பு சுடுதண்ணீரில் கல்உப்பு போட்டு வெதுவெதுப்பான பின்னர் வீங்கிய கண்பகுதிகளை நன்கு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்

பிறகு நந்தியாவட்டப்பூவின் இதழ்களை பறித்து துணியில் வைத்து கசக்கி சாறு எடுத்து கண்களில் விட்டுவர குணமாகும்


சங்குப்பூ (ம.பெ) காக்கனான்பூ (நீலநிறத்தில் இருக்கும்) அதை எடுத்து அரைத்து கண்களில் வீங்கிய பகுதிகளில் தடவி வர குணமாகும்


பாகற்காய் இலைசாற்றை விடலாம் , பிரம்மண்தண்டு செடியை கில்லினால் மஞ்சள் நிறத்தில் பால் வரும்,அந்த பாலை .கோழிகளின் கண்களில் விடலாம்

நுங்கு மரத்தின் பன மட்டை (அ) கருக்குமட்டை    இவற்றை தட்டி சாறு எடுத்து விடலாம்

கோவை தழை சாறு எடுத்து விடலாம் , முருங்கை தழையுடன் கல்உப்பு சேர்த்து அரைத்து துணியில் போட்டு சாறு எடுத்து கோழிகளின் கண்களில் விட்டுவர குணமாகும்

உணவுமுறைகள்:

  மதியவேளையில் தயிர்சாதம்,மோர்சாதம் குடுக்கலாம்

  வெந்தயம் தண்ணீர் குடுக்கலாம்

  சோர்வு நீங்க சுக்கு,கொத்தமல்லி கசாயம் குடுக்கலாம்


முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :


  கோடைகாலத்தில் முடிந்தவரை கோழிகளை தண்ணீரில் நனைத்து விடவும் இவ்வாறு செய்வதால் கோழிகளின் உடல்வெப்பநிலை குறைந்து நோய் தொற்று ஏற்படாமல் இருக்கும்

  கோழிகள் தங்கும் இடமானது காற்றோட்ட வசதி உள்ள இடமாகவும்,குளிர்ச்சியாக இருக்கும்படி பார்த்து கொள்ளவும்


ராம்நாட் ப்ரித்வி அலைப்பேசி எண் : 8124802464

Monday, April 23, 2018

கோழிக்கு : இரத்தகழிசல் நோய் மருந்து : அசோலா. சதீஸ்.

தேவையான பொருட்கள்
சோற்றுக்கற்றாழை 50 கிராம்
மணத்தக்காளி கீரை ஒரு கைப்பிடி
வெந்தயம் இரண்டு கரண்டி (ஸ்பூன்)
மிளகு அரை கரண்டி
சீரகம் அரை கரண்டி
பூண்டு 10 பல்

செய்முறை :
சோற்றுக்கற்றாழையை தோல் நீக்கி அதனுடன் இரண்டு கரண்டி வெந்தயத்தைச் சேர்த்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
ஊற வைத்த  கலவையுடன் மீதம் உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்க வேண்டும்.
அரைத்த விழுதை பாதிக்கப்பட்ட கோழிக்கு பெரிய கோழிக்கு ஒரு கோலி குண்டு அள்வும், சிறிய கோழிக்கு இலந்தைப்பழ அளவுக்கும் காலை ஒரு வேளையும் மாலை ஒரு வேளையுமாக மூன்று நாட்களுக்கு கொடுத்து வந்தால் கோழியின் இரத்தக்கழிசல் நோய் குணமாகும்.



அசோலா. சதீஸ்.

அலைப்பேசி : 98433 77470.

Saturday, April 21, 2018

வெள்ளை கழிசல் நோய் மருந்து: வேளாண்பல்கலை அச்சுபதிவு : அன்னூர் சதீஸ்


இந்தப் படம் அன்னூர் சதீஸ் அவர்கள் அனுப்பியது.

இந்த அச்சு பதிவு வேளாண்பல்கலைக் கழகத்தினுடையது.

நாம் தேடும்போது கிடைக்காது இது போன்ற தகவல்கள். ஆகவே இந்த அச்சுப்பதிவின் நகல் நமது பக்கத்தில் கிடைக்கும்படியாக சேமிக்கப்படுகிறது.


அன்னூர் சதீஸ் அலைப்பேசி எண் :72043 98574

கோழி : அம்மை நோய் மருந்து : குளத்தூர் சக்தி

** கோழி அம்மை நோய் தீர்க்கும் முறைகள் ** 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

இது கோழிகளை எல்லாப் பருவத்திலும் தாக்கக்கூடிய ஒரு நச்சுயிரி நோயாகும்தொண்டைமூக்குதாடைச் சதைஅலகின் ஓரங்கள்வாய்கால்கள் ஆகிய  இடங்களில் கொப்புளங்கள் தோன்றிய பிறகு புண்ணாக மாறிப் பின் உலர்ந்து   உதிரும்.  நோயுற்ற கோழிகளை மற்ற கோழிகளிடமிருந்து தனிமைப்படுத்த   வேண்டும். 

வெளிப்பூச்சுக்கான மருந்து: 

பூண்டு 10 பல்
மஞ்சள் தூள் 10 கிராம்

துளசி இலை 50 கிராம்
கற்பூரம் 5 கிராம்
,   
வேப்பிலை 50 கிராம்
,
 சின்ன சீரகம் 20கிராம் 

ஆகியவற்றை நன்கு அரைத்து   விளக்கெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயைச் சம அளவில் எடுத்து சூடுகாட்டிப் பாதிக்கப்பட்ட இடங்களில் பூச வேண்டும் 

வாய் வழியாக 5 எண்ணிக்கை மிளகை இடித்துப் பின்சின்ன சீரகம் 10 கிராம்பூண்டு 5 பல்மஞ்சள் 5 கிராம், 10 வேப்பிலை, 10 துளசி இலைகள் கலந்து அரைத்து இக்கலவையை திவனம் அல்லது அரிசி   குருனையில் கலந்து கொடுக்கவும். 

அம்மை நோய் குணமாகும். 

குளத்தூர் சக்தி அலைப்பேசி எண் : 95003 50840

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...