Thursday, March 29, 2018

உங்களுடன் ஓர் அறிமுகம்.

இந்த பக்கம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம், நமது நண்பர்களிடையே ஏற்ப்பட்ட விழிப்புணர்வுதான், குறிப்பாக இயற்க்கையான விவசாயமும் கால்நடை வளர்ப்பில் ஏற்ப்பட்ட விழிப்புணர்வே. குறைந்த செலவில் அனைவராலும் செய்யக்கூடியது "கோழி வளர்ப்பு". கோழி வளர்ப்பில் பலதரப்பட்ட வியாபார நோக்கத்துடன் கூடிய கலப்பினங்கள் அதிகம். அவற்றால் ஏற்படும் பிரச்சனைகளும் ஏராளம். அவற்றிலிருந்து நமது வருங்கால சந்ததிகள் விடுபட இன்று பல இளைஞர்கள் "தூய நாட்டுக்கோழிகள்" வளர்க்கிறார்கள், புதிதாய் வருபவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து உதவியும் செய்கிறார்கள். Facebook, Whatsup குரூப்புகள் உருவாக்கி அவர்கள் சிறப்பாக செயல் படுகிறார்கள், கூண்டு உருவாக்குவது முதல் மருத்துவ ஆலோசனை வழங்குவது வரை முன்னின்று உதவிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த குரூப்புகளில், பல அனுபவங்கள் மீண்டும் மீண்டும் பகிரும் நிலை ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, கோழிக்கு ஒரு குறிப்பிட்ட வியாதிக்காக மருந்து சொல்லப்பட்டிருக்கும். ஆனால் ஒரு புதிய நண்பர் குருப்பில் இணைந்திருந்தால் அவர் அந்த குறிப்பிட்ட வியாதிக்கான வைத்தியத்தை கேட்பார். இனி அதுபோல் இல்லாமல் அனைத்தும் தனித்தனி தலைப்பின் கீழ் எந்தெந்த நண்பர்களால் ஆலோசனை வழங்கப்பட்டது என்பது முதற்கொண்டு நமது பக்கத்தில் போடப்படும். ஆலோசனை வழங்கும் நண்பர்களின் கைப்பேசி எண் அவர்கள் விருப்பப்பட்டால், பகிரப்படும். இணைந்திருப்போம்.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...