Friday, April 6, 2018

கோழிக்கூண்டு அமைக்கும் முறை.

கோழிக்கூண்டு எப்போதும் தென்வடலாக அமைக்க வேண்டும்(தெற்கு வடக்காக). வாசல் கிழக்கு அல்லது மேற்கில் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம். காற்றோட்ட வசதியுள்ள வகையில் தரையிலிருந்து சுமார் 2.5 அடியில் இருந்து 3 அடிக்கு மேல் கோழி வலை தடுப்பு அமைக்க வேண்டும்.

1. கோழிவலை (Chicken Mesh or Weld Mesh) 2. செங்கல்/சிமிண்ட் கல்/தகரம் வைத்து 2.5 அல்லது 3 அடி உயரத்திற்கு தடுப்பு அமைக்க வேண்டும். 3. மேற்கூரை ஓடு அல்லது தகரத்தால் அமைக்கலாம். கீற்று கொட்டகை அமைத்தால் கீற்றுக்கு மேல் கோழிவலை விரிப்பது பாதுகாப்பானது. 4. கதவு 5. (நீலநிறக்கோடு) ஊக்கு அல்லது ஸ்க்ரீன் கம்பி(Curtain Spring) அமைத்துக்கொள்வது நல்லது. வெயிற்காலங்களில் கோழிக்கூண்டை ஈரத்துணியால் மூடுவதற்கோ மறைப்பதற்கோ பயன்படும்.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...