Thursday, April 12, 2018

கோழி சளி மருந்து

கோழிகளுக்கு ஏற்படும் சளிக்கு இயற்கை முறையில் மருந்து செய்யும் முறை.
3 அல்லது 4 வெற்றிலை (தூதுவளை மற்றும் துளசி மிகச்சிறிய அளவில் சேர்த்துக்கொள்ளலாம்)
சுக்கு இரண்டு அல்லது 3 துண்டுகள், திப்பிலி 3 அல்லது 4 கிராம், மிளகு 5 எண்ணிக்கை சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவிற்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும். அரைத்ததை மிளகு சைசில் உருட்டிக்கொள்ள வேண்டும்.
சேவல்களுக்கு 4 உருண்டைகளும், கோழிகளுக்கு 2 அல்லது 3 உருண்டைகள்( எடைக்கேற்ப) குஞ்சுகளுக்கு அரை உருண்டை அளவிலும் கொடுக்கலாம்.
இந்த முறை திரு. திருவேங்கடச்சாமி அவர்களால் எனக்கு சொல்லப்பட்டது. அதன் பலன் என் அனுபவத்தில் சிறப்பாக இருந்ததால் பகிர்கிறேன்.
திரு. திருவேங்கடசாமி அவர்களை நீங்களும் தொடர்புகொண்டு பயன் பெறலாம்.
கீழே உள்ள Youtube link தெளிவான வழியை சொல்லும்.

உங்கள் மேலான கருத்துக்களை கமெண்ட் செய்யவும்.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...