இந்தியாவில் உள்ள நாட்டு_கோழி வகைகள் பற்றி குழுக்களில்
கிடைத்தத் தகவல்கள்.
1: அசீல் அல்லது அசில் - பெருவிடை கோழிகள் :
அசில் கோழி இந்தியாவின் பெருமை மிக்க பெரிய கோழி இனமாகும். ஆந்திரா மற்றும் தமிழ்நாடு மேற்கு மண்டலமான கொங்கு மண்டலத்தை தாயகமாக கொண்டது உண்மை அல்லது தூய்மை என்பதே அசில் என்பதின் பொருளாகும்.
அசில் சக்தி வாய்ந்த, உறுதியான, திடமான வெளித்தோற்றம், கம்பீரமான நடை, உறுதியான சண்டை போடும் திறன் கொண்டவை. இவ்வினம் திடகாத்திரமான , கூர்மையான பார்வை கொண்ட இனமாகும்.
அசில் பெரும்பாலும் சண்டைக்காவும் இறைச்சிக்காகவும் வளர்க்கபடுகிறது. இதன் அலகு குட்டையாகவும் , வளைந்தும் காணப்படும் . முகம் நீளமாகவும், கழுத்து நீண்டும், வால் சிறியதாகவும் , தொங்கி கொண்டும் காணப்படும். கால்கள் உயரமானவை மற்றும் உறுதியானவை.
சேவல் உடல் எடை : 3 - 4 கிலோ
பெட்டை கோழி எடை : 2 - 3 கிலோ
ஆண்டு முட்டை உற்பத்தி : 90 - 100
கருவுறும் திறன் : 66%
குஞ்சு பொரிக்கும் திறன் : 63%
2. சிறுவிடை கோழிகள் :
தமிழகத்தை தாயகமாக கொண்ட கோழிகளில்
சிறுவிடை கோழிகள் முதன்மையானதாகும்
பெருவிடை கோழிகளை காட்டிலும் அதிக முட்டை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது , முட்டை பொரிக்கும் தன்மையும் அதிகம் , இந்திய சிவப்பு காட்டு கோழிகள் என்று சொல்ல கூடிய இனத்தில் இருந்து வந்தது
அரசாங்கத்தின் குறிப்புகளில் இந்த சிறுவிடை கோழிகள் பற்றிய தகவல் இல்லை ஏன் என்று தெரியவில்லை கொங்கு மண்டலம் தவிர்த்து தமிழகத்தில் பெருபான்மை மக்கள் வளர்த்தும் கோழிகளில் சிறுவிடை முதன்மையானதாகும்
சேவல் உடல் எடை : 1 to 1.5 கிலோ
பெட்டை கோழி எடை : 1 to 1.2 கிலோ
ஆண்டு முட்டை உற்பத்தி : 120
கருவுறும் திறன் : 70%
குஞ்சு பொரிக்கும் திறன் :65%
3. கடக்நாத் அல்லது கருங்கால் கோழி :
பொதுவாக “கலாமாசி” என்று அழைக்கிறார்கள். கருப்பு சதையுடைய பறவை என்பது இதன் அர்த்தம். மத்திய பிரதேச மாநில தாபுவா மற்றும் தார் மாவட்டமும் அருகில் உள்ள ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநில மாவட்டமும் அதாவது 800 சதுர மைல் பரப்பு இவ்வகை இனத்தின் தோற்றம் ஆகும்.
சேவல் வேண்டுதலுக்காக பயன்படுத்தபடுகிறது. அதிக வெப்பத்தையும், குளிரையும் தங்கி வளரும் தன்மை உடையது. கோழி குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன் , பின்பகுதில் கருப்பு கோடுகளுடன் காணப்படும். பருவம் அடைந்த கோழிகளின் இறகுகள் கரு நீல நிறத்தில் காணப்படும். இறைச்சி கருப்பாக பார்வைக்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தலும் , சுவையாக இருக்கும்.
சேவல் உடல் எடை : 1.5 - 2 கிலோ
பெட்டை கோழி எடை : 1 - 1.5 கிலோ
ஆண்டு முட்டை உற்பத்தி : 105
கருவுறும் திறன் : 55%
குஞ்சு பொரிக்கும் திறன் : 52%
4.மொட்டை கழுத்து கோழி
:
இவ்வினத்தின் கழுத்து பகுதியில் இறுகுகள் இல்லாமல் வெறுமையாகவும் அல்லது கழுத்தின் முற்பகுதில் கொத்தாக சிறகுகள் இருப்பதால் இதற்கு மொட்டை கழுத்து கோழி என்று பெயர்
.
கேரளாவின் திருவனந்தபுரம் மொட்டை கழுத்து கோழி தாயகமாகும். இவ்வினம் நீளமான உருண்டை வடிவ கழுத்துடைய இனமாகும். பருவ வயதை அடையும் பொழுது, சேவலின் தோல் சிவப்பு நிறத்திற்கு மாறிவிடுகிறது.
20 ஆவதுவாரத்தில் உடல் எடை :
1 கிலோ
பருவ வயது :201 நாட்கள்
கருவுறும் திறன் : 55%
5 கிளி மூக்கு கோழிகள் :
கிளி மூக்கு கோழிகள் என்பவை கோழி இனங்களில் கிளியைப் போன்ற அலகினைக் கொண்டவையாகும். இவை தமிழ்நாட்டை தாயகமாக கொண்ட இனமாகும்
கோழியின் வால் மிகவும் நீலமாகவும் அழகாவும் உடைய தோற்றம் கொண்டது .
அழிவின் விளிம்பில் இருக்கும் இவைகளை
அழகுக்காக வளர்க்கப்படுகின்றன .
சேவல் உடல் எடை : 4 to 5 கிலோ
பெட்டை கோழி எடை : 3 - 3.5 கிலோ
அதிக எடை உள்ளதால் கருகூடும் தன்மை குறைந்தே கானப்படுகிறது
6. சிட்டகாங்
சிட்டகாங் பிறப்பிடம் மேகாலய மற்றும் திரிபுராவாகும். மிகப்பெரிய உடல் வாகு கொண்டது. சிறந்த சண்டை கோழி இனமாகும். இதன் வால் பகுதி தொங்கிக் கொண்டிருக்கும். குறைந்த முட்டை இடும் திறன் கோண்டது
சேவல் உடல் எடை : 3.5 - 4.5 கிலோ
பெட்டை கோழி எடை : 3 - 4 கிலோ.
7.நிக்கோபாரி
நிக்கோபாரி இனம் அந்தமான் தீவை சார்ந்ததாகும். இது பழுப்பு, கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
சிறிய உடல் அமைப்புடன் குட்டையான கால்கள் மற்றும் கழுத்துடன் காணப்படும். நாட்டு கோழி இனங்களிலே, நிக்கோபாரி அதிக முட்டை இடும் திறன் கோண்டது.
ஆண்டு முட்டை உற்பத்தி : 140 – 160
·
நாட்டுக்கோழி இனங்களில் அதிக முட்டையிடும் தன்மை கொண்டது இந்த இனங்கள் தான்
No comments:
Post a Comment