Friday, April 6, 2018

கோழியும் கீழாநெல்லியும்

கீழாநெல்லி கல்லீரலை காக்கும் ஓர் அற்புத மூலிகை என்பது அனைவருக்கும் தெரிந்தது. கோழிகளுக்கும் கீழாநெல்லி ஒரு சிறந்த மருந்து.
கீழாநெல்லியை பறித்து இளம் வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு கோழிகளின் உணவில் கலந்து வாரம் ஒரு முறை கொடுத்து வந்தால் கல்லீரல் தொற்று வராது.
கோழிகளுக்கு வரும் அதிக நோய்கள் கல்லீரல் தொற்றின் மூலமாகவே வருகிறது.
கீழாநெல்லி செடிகளை அதிகம் நம்மால் வளர்க்க முடியவில்லை என்றால் கீழாநெல்லி பொடி நாட்டு மருந்து கடையில் வாங்கிக் கொள்ளலாம்.
கோழிகளுக்கு நோய் வருமுன் காப்பதற்கு கீழாநெல்லி ஒரு சிறந்த மருந்து என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.


உங்கள் அனுபவங்களை கமெண்ட் செய்யுங்கள். நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும்.

கீழாநெல்லி பற்றி தெரிந்துக் கொள்ள "கீழாநெல்லி"

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...