Wednesday, April 18, 2018

கரையான் உற்பத்தி :: அதிக புரதசத்து கோழித்தீவனம்.

கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 
1. ஒரு பழைய பானை 
2. கிழிந்த கோணி/சாக்கு
3. காய்ந்த சாணம் 
4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் 

கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். 

கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். 

மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள்

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...