பஞ்சகாவ்யத்தை கோழிகளுக்கு பயன்படுத்துவது
கோழிகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் என்று நண்பர்கள் கூறியதன் பேரில்
நான் பயன்படுத்தி பார்த்ததில் கோழிகளின் சுறுசுறுப்புத் தன்மை அதிகரித்ததை பார்க்க
முடிந்தது.
தற்போது மாதம் இரண்டு முறை கீழ் கண்ட விகிதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
பயன்படுத்தும் முறை :
5ml பஞ்சகாவ்யத்துடன்
அரை லிட்டர் தண்ணீரை கலந்து காலை கோழிகளை மேய்ச்சலுக்கு திறந்துவிடுமுன் குடிப்பதற்கு
கொடுத்துவிட்டு திறந்துவிட வேண்டும். மீதக் கலவையை செடிகளுக்கு தெளித்து விட்டால் பூச்சிகள் வராது.
அதே கலவையை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.
No comments:
Post a Comment