Monday, April 16, 2018

மேய்ச்சல் முறை கோழிகளுக்கு: எதிர்ப்பு சக்தி.

ஐயா. திருவேங்கடசாமி அவர்களின் அனுபவ ஆலோசனையை பகிர்ந்துள்ளேன்.

மேய்ச்சல் முறையில் வளரும் கோழிகள் கழிவு நீர், கழிவு உணவுகள் மற்றும் எச்சம் கலந்த உணவைக்கூட உண்ணலாம்.

ஆகவே கோழிகளுக்கு வாரம் இருமுறை
சீரகம்
வரகொத்தமல்லி
சோப்பு
சுக்கு சிறிதளவு

கலந்து கசாயம் வைத்து கோழிகளுக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.

இது போல் கொடுத்து வந்தால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு. ஐயா அவர்களின் ஆலோசனை.
பிராய்லர் கோழிகளின் கழிவு நீர், கெட்டுப்போன சாதம் சாப்பிட்டு மேய்ச்சல் முறை கோழிகளுக்கு ஏற்படும் தொற்றுகளை சரி செய்வது முடியாது.
மேய்ச்சல் முறை கோழிகளுக்கு வைக்கப்படும் தண்ணீரை காகம் நாய்கள் குடிக்காமல் இருக்க வேண்டும். தண்ணீர் வைக்கும் பாத்திரம் ஒரு நாளுக்கு இரண்டு முறை கழுவி சுத்தமான தண்ணீர் அல்லது மூலிகை தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கோழிப்பேன் தொல்லைக்கு மருந்து

திரு. திருவேங்கிடசாமி அவர்களின் மருத்துவக் குறிப்பு :   அச்சுப்பதிவில் தந்தவர் : இயற்கை வழி நாட்டுக்கோழி நண்பர் கார்த்திக். *கண்களை சுற...